பூசணிக்காய் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமான சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...!

Posted By:

Pumpkin Chutney Recipe in Tamil: தினமும் காலை அல்லது இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசைதான் உணவாக இருக்கிறதா? இட்லி, தோசைக்கு பிரதான சைடிஷ் என்றால் அது சட்னி அல்லது சம்பர்தான். ஒரே மாதிரி சட்னி சாப்பிட்டு உங்களுக்கு போரடித்து விட்டதா? இட்லி, தோசைக்கு ஏதாவது புதிய சட்னியை அரைக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் மஞ்சள் பூசணி உள்ளதா? இதுவரை நீங்கள் பூசணிக்காயை வைத்து சாம்பார், பொரியல் தான் செய்திருப்பீர்கள்.

ஆனால் அதைக் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்யலாம் என்பது தெரியுமா? ஈஸியாக செய்யக்கூடிய இந்த சட்னி இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

Pumpkin Chutney Recipe How to Make Pumpkin Chutney

உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூசணிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்:

- 1/4 கிலோ மஞ்சள் பூசணிக்காய்
- 4 வரமிளகாய்
- 1 டீஸ்பூன் எள்
- 2 டேபிள் ஸ்பூன் வறுத்த கடலை அல்லது பொட்டுக்கடலை
- நெல்லிக்காய் அளவு புளி
- 1/2 டீஸ்பூன் வெல்லம்
- 1/2 கப் துருவிய தேங்காய்
- தேவையான அளவு உப்பு.

தாளிக்க:

- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 வர மிளகாய்
- சிறிது கறிவேப்பிலை
- 2 டீஸ்பூன் எண்ணெய்

செய்முறை:

- மஞ்சள் பூசணிக்காயை கழுவி தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

- இதை ஒரு குக்கருக்கு மாற்றவும். அதில் உப்பு, வெல்லம், புளி மற்றும் சிறிது தண்ணீர் சேர்க்கவும். குக்கரை மூடி ஒரு விசில் விட்டு பூசணிக்காய் மென்மையாகும் வரை வேக வைக்கவும்.

- பூசணிக்காய் வேகும் அதே நேரத்தில், ஒரு கடாயில் வர மிளகாய் மற்றும் எள் விதைகளை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். அதேசமயம் வேர்கடலையையும் சேர்த்து வறுக்கவும். பொட்டுக்கடலையை பயன்படுத்துவதாக இருந்தால் வறுக்கத் தேவையில்லை.

- வேக வைத்த பூசணிக்காய் ஆறிய பிறகு, அதை தேங்காய், வறுத்த மிளகாய் மற்றும் எள் மற்றும் வறுத்த போட்டுக்கடலையுடன் சேர்த்து அரைக்கவும்.

- மென்மையான விழுதாக அரைத்த பின் ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

- சட்னியை தாளிக்க ஒரு கரண்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

- பின்னர் கடுகு சேர்த்து, அது வெடிக்கும் வரை காத்திருக்கவும்.

- பின்னர் வர மிளகாய், உளுந்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

- வர மிளகாய் மற்றும் உளுந்தம் பருப்பு நிறம் மாறியதும் அதை சட்னி மீது கொட்டி நன்கு கிளறவும்.

- அவ்வளவுதான் சூப்பரான மஞ்சள் பூசணி சட்னி ரெடி. இது சூடான இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, December 25, 2025, 20:49 [IST]
Desktop Bottom Promotion