Latest Updates
-
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
புடலங்காய் இருந்தா.. இப்படி ஒருடைம் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Pudalangai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தினமும் பொரியல் கேட்பார்களா? ஆனால் சில காய்கறிகளில் பொரியல் செய்தால் வேண்டாம் என்பார்களா? முக்கியமாக புடலங்காய் என்றால் வேண்டாம் என்று கூறுவார்களா? அப்படிப்பட்டவர்களை புடலங்காய் சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் அந்த புடலங்காயைக் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் பொரியல் செய்து கொடுங்கள். இப்படி புடலங்காய் பொரியலை செய்யும் போது, பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக போட்டி போட்டு சாப்பிட்டு உங்களுக்கே கிடைக்காதவாறு காலி செய்துவிடுவார்கள். இந்த புடலங்காயை பொரியலை பேச்சுலர்கள் கூட செய்து சாப்பிடலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு நல்ல சுவையான புடலங்காயை பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புடலங்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பு வேக வைப்பதற்கு...
* கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நீளவாக்கில் நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புடலங்காய் - 300 கிராம் ()
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கையளவு
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் கடலைப் பருப்பை கழுவி சேர்த்து, அதில் பருப்பு
மூழ்கும் அளவில் நீரை ஊற்ற வேண்டும்.
* பின் அதில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள்
சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டி விட்டு, பருப்பை
தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு புடலங்காயை எடுத்து உப்பு சேர்த்து நன்கு தேய்த்து, பின்
நீரில் கழுவ வேண்டும். அதன் பின் அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு,
சற்று நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு மற்றும் 1 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாயை முழுதாக சேர்த்து, பின் பொடியாக நறுக்கி
வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும்
நறுக்கி வைத்துள்ள புடலங்காயை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 3/4 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
சேர்த்து, 1 கையளவு நீரை தெளித்து, நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து
10 நிமிடம் புடலங்காயை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், புடலங்காய் வெந்திருக்கும்.
பின் அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து நன்கு கிளறி, 2
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து 30 நொடிகள் கிளறி இறக்கினால்,
சுவையான புடலங்காய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











