இட்லிக்கு ஒருடைம் இந்த கையேந்தி பவன் பொட்டுக்கடலை சாம்பாரை செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..

Posted By:

Kaiyendhi Bhavan Pottukadalai Sambar Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் காலை டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு தினமும் என்ன சைடுடிஷ் செய்வதென்று யோசிப்பீர்களா?

அப்படியானால் ஒருமுறை அதற்கு கையேந்தி பவன் பொட்டுக்கடலை சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பார் சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

Pottukadalai Sambar How To Make A Kaiyendhi Bhavan Pottukadalai Sambar Recipe

உங்களுக்கு கையேந்தி பவன் பொட்டுக்கடலை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் பொட்டுக்கடலை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பெரிய வெங்காயம் - 1
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 3
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - சிறிது
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் குக்கரில் நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், சாம்பார் தூள், பெருங்காயத் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் அவை அனைத்தும் மூழ்கும் அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் உள்ள நீரை மட்டும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வேக வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு லேசாக ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பொட்டுக்கடலையை அரைத்து பொடி செய்து, அத்துடன் அரிசி மாவையும் சேர்த்து, நீர் ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி ஒரு கொதி விட வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை கலவையை ஊற்றி, தனியாக எடுத்து வைத்துள்ள மசாலா நீரை ஊற்றி கிளறி, வெல்லம், பெருங்காயத் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி மற்றும் நெய் ஊற்றி கிளறினால், சுவையான கையேந்தி பவன் பொட்டுக்கடலை சாம்பார் தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Thursday, August 8, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion