Latest Updates
-
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...!
1 கப் பொட்டுக்கடலையும், 4 பச்சை மிளகாயும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது..
Pottukadalai Podi Recipe In Tamil: எப்போதும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரி சட்னி, சாம்பார், குருமா என்று செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சிம்பிளாக, அதே சமயம் சட்டென்று செய்யக்கூடியவாறு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் வேண்டுமா? உங்கள் வீட்டில் 1 கப் பொட்டுக்கடலையும், 4 பச்சை மிளகாயும் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையைக் கொண்ட பொடி ஒன்றை தயாரித்துக் கொள்ளுங்கள்.
இந்த பொடியை இட்லி, தோசையுடன் எண்ணெய் சேர்த்து கலந்தும் சாப்பிடலாம் அல்லது நீர் சேர்த்து சட்னி போன்றும் சாப்பிடலாம். இப்படி ஒரு பொடியை ஒருமுறை செய்தால், 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். முக்கியமாக பயணங்களின் போது, இப்படியான ஒரு பொடியை செய்து எடுத்துக் கொண்டால், சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது. முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ஒரு பொடியும் கூட.

உங்களுக்கு பொட்டுக்கடலை பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொட்டுக்கடலை - 1 கப்
* சீரகம் - 1 ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 7 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் பொட்டுக்கடலை
சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் சீரகத்தை சேர்த்து 1 நிமிடம் வறுத்து,
பொட்டுக்கடலையுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் பச்சை மிளகாயை
துண்டுகளாக்கி சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது கறிவேப்பிலையை சேர்த்து, நன்கு ஈரப்பதம் போக
வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் சீரகத்தை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே ஜாரில் வதக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தோல் நீக்காத
7 பூண்டு பற்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை பொட்டுக்கடலை பொடியுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதை ஒரு பாட்டிலில் போட்டுக் கொண்டால், பொட்டுக்கடலை பொடி
தயார்.
* இந்த பொடியை சூடான சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
இல்லாவிட்டால், இட்லி, தோசைக்கு இட்லி பொடி போன்று எண்ணெய் சேர்த்து
கலந்தோ அல்லது சிறிது நீரை ஊற்றி சட்னி போன்று கலந்தோ
சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











