Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
உருளைக்கிழங்கை இந்த மாதிரி மசாலா அரைச்சு ஒரு தடவை வறுத்து பாருங்க... இனிமே இப்படி மட்டும்தான் செய்வீங்க...!
Potato Masala Fry Recipe in Tamil: உருளைக்கிழங்கு என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. பிடிக்காது என சொல்பவர்கள் மிகவும் குறைவு. உருளைக்கிழங்கை விதவிதமாக சமைத்து சாப்பிடுவோம். எதில் சேர்த்து சமைத்தாலும் அதன் தனித்துவம் மாறாது இருப்பதோடு, அதன் சுவையையும் அதிகப்படுத்தி கொடுக்கும்.
உங்கள் வீட்டிலும் நீங்கள் பல விதமாக உருளைக்கிழங்கை சமைத்திருப்பீர்கள். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள், மீண்டும் மீண்டும் செய்வீர்கள். வாங்க அரைத்து விட்ட உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு - 2
- வெங்காயம் - 1
- மஞ்சள்தூள் - ¼ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
- பூண்டு - 2 பல்
- கொத்தமல்லி விதை - ½ தேக்கரண்டி
- தேங்காய் - ¼ மூடி
- வரமிளகாய் - 3
- மிளகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - ¼ தேக்கரண்டி
- சோம்பு - ¼ தேக்கரண்டி
தாளிக்க:
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கடுகு - ½ தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - ½ தேக்கரண்டி
- கடலைப்பருப்பு - ½ தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- முதலில் உருளைக்கிழங்கை மண் இல்லாமல் சுத்தமாக கழுவி தோல் நீக்கி கொள்ளவும்.
- பின் அவற்றை ஒரு இன்ச் அளவிற்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள்த்தூள் சேர்த்து நறுக்கிய துண்டுகளை சேர்த்து வதக்கும் வரை வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து வைத்து கொள்ளவும்.
- தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் தோல் உரித்த பூண்டு பல், கொத்தமல்லி விதை, தேங்காய், வரமிளகாய், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல் அவற்றை கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதனுடன் கருவேப்பிலை, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- அதில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக விடவும்.
- பின் அதனுடன் கொரகொரப்பாக அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மூடி 5 நிமிடங்களுக்கு வேக விடவும். அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும்.
- உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான அரைத்து விட்ட உருளைக்கிழங்கு வறுவல் தயார்!



Click it and Unblock the Notifications











