அடுத்தமுறை உருளைக்கிழங்கு ப்ரைக்கு இப்படி 1 பொடி அரைச்சு செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்...

Posted By:

Pudhu Potato Fry Recipe In Tamil: காய்கறிகளில் பெரும்பாலானோரின் விருப்பமான காய்கறி என்றால் அது உருளைக்கிழங்காகத் தான் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோரும் உருளைக்கிழங்கு பிரியர்கள் தானா? அடிக்கடி வீட்டில் உருளைக்கிழங்கை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிடுவீர்களா?

சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு ப்ரை செய்ய நினைத்தால், அதற்கு ஸ்பெஷலாக ஒரு பொடியை மட்டும் தயாரித்து சேர்த்து பாருங்கள். அதுவும் வேர்க்கடலை, பூண்டு, வரமிளகாய் சேர்த்து பொடி தயாரித்து சேர்த்து உருளைக்கிழங்கு ப்ரை செய்து பாருங்கள். ருசி வேற லெவலில் இருக்கும். இப்படி செய்யும் உருளைக்கிழங்கு ப்ரையை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், இன்னும் அல்டிமேட்டாக இருக்கும்.

Potato Fry How To Make a Pudhu Potato Fry Recipe

உங்களுக்கு புதுவிதமான உருளைக்கிழங்கு ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* வரமிளகாய் - 2
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய உருளைக்கிழங்கு - 2
* உப்பு - சிறிது

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்குகளை எடுத்து, அவற்றின் தோலை நீக்கிவிட்டு, சற்று நீள நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லியைத் தூவி வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்து குளிர வைத்த பொருட்களை சேர்த்து, சிறிது உப்பு தூவி, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது உப்பு தூவி கிளறி, மூடி வைத்து, 2-3 நிமிடம் உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மற்றும் புதுவிதமான உருளைக்கிழங்கு ப்ரை தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 20, 2025, 14:26 [IST]
Desktop Bottom Promotion