Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
ப்ளைன் குருமா
உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சைடு டிஷ் ஒன்று உள்ளது. அது தான் ப்ளைன் குருமா.
பலரது வீடுகளில் இரவு வேளையில் சப்பாத்தியாகத் தான் இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி தான் செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சைடு டிஷ் ஒன்று உள்ளது. அது தான் ப்ளைன் குருமா.

இந்த குருமா செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். கீழே அந்த ப்ளைன் குருமாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, தோசை, இட்லிக்கும் அற்புதமாக இருக்கும்.
MOST READ: சுவையான... காளான் மசாலா
குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள குருமாவில் விருப்பமிருந்தால் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* பட்டை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* பிரியாணி இலை - 1
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1 கப்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1/4 டீஸ்பூன்
* முந்திரி - 4
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் பச்சை மிளகாயை முழுதாக சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்கவும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* பிறகு தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். தக்காளி வதங்குவதற்குள், மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக வைத்துக் கொள்ளவும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி, சிறிது நீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ப்ளைன் குருமா ரெடி!



Click it and Unblock the Notifications











