Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...!
பீர்க்கங்காயை ஒருவாட்டி இந்த மாதிரி குழம்பு செய்யுங்க... பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Peerkangai Kulambu Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் மதியம் என்ன சமைப்பது என்று யோசித்து முடிவெடுப்பது ஒரு பெரிய வேலையாக உள்ளதா? மேலும் ஒரே மாதிரியான காய்கறியைக் கொண்டு ஒரே ஸ்டைலில் குழம்பு வைத்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? பொதுவாக பீர்க்கங்காய் கொண்டு பொரியல், கூட்டு போன்றவற்றை தான் செய்வோம்.
ஆனால் அந்த பீர்க்கங்காய் கொண்டு குழம்பு செய்யலாம் என்பது தெரியுமா? இப்படி செய்யும் பீர்க்கங்காய் குழம்பானது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இப்படி குழம்பு செய்யும் போது பீர்க்கங்காய் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பீர்க்கங்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 1 பல்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பீர்க்கங்காய் - 200 கிராம் (தோல் நீக்கி நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* புளித் தண்ணீர் - சிறிது
* தேங்காய் பால் - 3/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவி சேர்த்து,
அத்துடன் 1 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் பூண்டு சேர்த்து,
அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை நன்கு மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்க வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து, அதோடு மஞ்சள்
தூள், சாம்பார் தூள் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து, பீர்க்கங்காயை
வேக வைக்க வேண்டும்.
* பீர்க்கங்காய் வெந்ததும், அதில் புளித் தண்ணீரை ஊற்றி கிளறி, பச்சை
வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். முக்கியமாக புளி நீரை அதிகம்
சேர்த்துவிட வேண்டாம்.
* அடுத்து அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கலந்து, 3-4 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து,
கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான பீர்க்கங்காய் குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications











