Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
அடுத்தமுறை பன்னீரை இப்படி கிரேவி பண்ணுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Paneer Manchurian Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் பிரியரா? அடிக்கடி உங்கள் வீட்டில் பன்னீரை சமைப்பீர்கள். எப்போதும் பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் கிரேவி என்று தான் செய்து சாப்பிடுவீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை பன்னீரை சமைப்பதாக இருந்தால், அந்த பன்னீரைக் கொண்டு பன்னீர் மஞ்சூரியன் கிரேவியை செய்யுங்கள். இந்த பன்னீர் மஞ்சூரியன் கிரேவி ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். வேண்டுமானால் இந்த கிரேவியை ட்ரை செய்தால், பன்னீர் மஞ்சூரியனாக சாப்பிடலாம்.

உங்களுக்கு பன்னீர் மஞ்சூரியன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் மஞ்சூரியன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
மாவிற்கு...
* மைதா - 1/2 கப்
* சோள மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் - 5-8 டேபிள் ஸ்பூன்
சாஸ் செய்வதற்கு...
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 3-4 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* சோள மாவு - 2 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கையளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்கள்
அனைத்தையும் எடுத்து, நீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள
வேண்டும். மாவானது மிகவும் நீராகவும் இருக்கக்கூடாது, கெட்டியாகவும்
இருக்கக்கூடாது.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை அந்த மாவில் பிரட்டி
எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம், குடைமிளகாய், தக்காளியுடன், சிறிது உப்பு
மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை
ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் கெட்சப், சோயா சாஸ், வினிகர் சேர்த்து நன்கு கிளறி,
பன்னீர் பிரட்டிய மாவு எஞ்சி இருந்தால், அவற்றை சேர்க்கலாம் அல்லது
சோள மாவு நீர் சேர்த்து கலந்து, அவற்றை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* கிரேவியானது சற்று கெட்டியாகத் தொடங்கியதும், பன்னீர் துண்டுகளை
சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, மேலே ஸ்பிரிங் ஆனியனை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான பன்னீர் மஞ்சூரியன் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











