1 கப் பச்சரிசி வெச்சு.. ஈவ்னிங் ஒருடைம் இந்த ஸ்நாக்ஸ் செய்யுங்க.. டேஸ்ட் டக்கரா இருக்கும்...

Posted By:

Pacharisi Appam Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பசிக்கிறது என்று கூறினால், அவர்களுக்கு பஜ்ஜி, போண்டா என்று எண்ணெயில் பொரித்து கொடுப்பதற்கு பதிலாக, வீட்டில் உள்ள பச்சரிசி கொண்டு வித்தியாசமான சுவையைக் கொண்ட ஒரு அப்பம் செய்து கொடுங்கள்.

இந்த அப்பம் கேரளாவில் மிகவும் பிரபலமானது. முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அருமையாக இருக்கும்.

Pacharisi Appam How To Make a Raw Rice Appam

உங்களுக்கு இந்த பச்சரிசி அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சரிசி அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சரிசி - 1 கப்
* வெல்லம் -1 கப்
* தண்ணீர் - 1 கப் + 1/4 கப்
* ஏலக்காய் - 2
* உப்பு - 1 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் - பொடியாக நறுக்கியது

செய்முறை:

* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில் நீரை ஊற்றி குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் 2 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சரிசியை போட்டு, அத்துடன் 2 ஏலக்காய் சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 சிட்டிகை உப்பு, 1 சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, நீரை ஊற்றி, வெல்லத்தை கரைக்க வேண்டும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின் கரைத்த வெல்ல நீரை நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் போதே, மாவுடன் வடிகட்டி ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதை மாவுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு ஆப்ப கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி ஊற்றி, மூடி வைத்து, 4 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், சுவையான பச்சரிசி அப்பம் தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion