Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
எப்பவும் செய்யுற கீரை பொரியலை ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. வேண்டாம்-ன்னு சொல்லாம சாப்பிடுவாங்க..
Pachai Payaru Araikeerai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி கீரை செய்வீர்களா? அதுவும் கீரை வாங்கினால் பொரியல் தான் அடிக்கடி செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அடுத்தமுறை கீரை வாங்கினால், அதுவும் அரைக்கீரை வாங்கினால், அத்துடன் பச்சை பயறை சேர்த்து பொரியல் செய்யுங்கள். இந்த பொரியல் மிகவும் சுவையாக இருப்பதால், பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு பச்சை பயறு அரைக்கீரை பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு அரைக்கீரை பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1/4 கப்
* உப்பு - சிறிது
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 4
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைக்கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் குக்கரில் பச்சை பயறை எடுத்து, அதை நீரில் 2 முறை
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பயறு மூழ்கும் வரை நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி விட
வேண்டும்.
* பின்பு உரலில் பூண்டு சேர்த்து முதலில் தட்டிக் கொள்ள வேண்டும்.
பின் தட்டியதை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே உரலில் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் தட்டி
வைத்துள்ள பூண்டு மற்றும் வரமிளகாயை சேர்த்து, நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து நன்கு 5
நிமிடம் தொடர்ந்து கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* கீரையானது நன்கு சுருங்கி, வெந்ததும், வேக வைத்துள்ள பச்சை பயறை
சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கினால், சுவையான பச்சை
பயறு அரைக்கீரை பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











