1 வெங்காயமும், கொஞ்சம் பொட்டுக்கடலையும் வெச்சு.. இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. இட்லி தோசைக்கு செமயா இருக்கும்.

Posted By:

Vengaya Pottukadalai Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி, சாம்பார் என்று செய்து போரடித்துவிட்டதா? அதுவும் சட்னி என்றால் அதற்கு சட்னி வேண்டும். ஆனால் அந்த தேங்காய் இல்லாமல், வெறும் வெங்காயமும், பொட்டுக்கடலையும் வைத்து, சுவையான சட்னியை செய்யலாம்.

இந்த சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் டக்கென்று ஒரு சட்னியை செய்ய நினைத்தால், இந்த சட்னியை செய்யலாம்.

Onion Pottukadalai Chutney How To Make a Vengaya Pottukadalai Chutney Recipe

உங்களுக்கு வெங்காய பொட்டுக்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய பொட்டுக்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5 சிறிய பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறு துண்டு புளியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வெங்காய பொட்டுக்கடலை சட்னி தயார்.

Image Courtesy: Veena's Curryworld

[ of 5 - Users]
Story first published: Monday, September 16, 2024, 8:22 [IST]
Desktop Bottom Promotion