For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ப்ரை

By Maha
|

இதுவரை சிக்கனை எத்தனையோ ஸ்டைலில் சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த சிக்கனை கேரளா ஸ்டைலில் சமைத்து சாப்பிட்டதுண்டா? அதிலும் கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ப்ரையை முயற்சி செய்தால், நிச்சயம் அந்த சுவைக்கு நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள். அந்த அளவில் இந்த பெப்பர் சிக்கன் ப்ரை அருமையான சுவையில் இருக்கும்.

இங்கு அந்த கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

Kerala Style Pepper Chicken Fry Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

ஊற வைப்பதற்கு...

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மசாலாவிற்கு...

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மிளகு - 1 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.

பின் மிளகை லேசாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் பொடித்து வைத்துள்ள மிளகு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சோம்பு பொடி சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி, பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேரும் வரை பிரட்டி விட வேண்டும்.

எப்போது சிக்கனில் நிறம் மாற ஆரம்பிக்கிறதோ, அப்போது 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ப்ரை ரெடி!!!

English summary

Kerala Style Pepper Chicken Fry Recipe

Take a look at the Kerala style pepper chicken fry recipe and do give it a try. This Kerala style pepper chicken fry recipe is sure to enthrall your taste-buds.
Story first published: Saturday, September 13, 2014, 13:16 [IST]
Desktop Bottom Promotion