மண மணக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள்!!!

By Maha

தமிழ்நாட்டில் அசைவ உணவுகளில் செட்டிநாடு ஸ்டைலுக்கு இணை எதுவும் வர முடியாது. இந்த ஸ்டைல் உணவுகள் நல்ல மணத்துடனும், காரமாகவும், சுவையுடனும் இருக்கும். பலருக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் தான் பிடிக்கும். மேலும் அவற்றை எப்படி தான் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும் ஆவலாகவும் இருக்கும்.

பேச்சுலர்களுக்கான ஈஸியான சில சிக்கன் ரெசிபிக்கள்!!!

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, சில மண மணக்கும் செட்டிநாடு ரெசிபிக்களை உங்களுக்காக செய்முறையுடன் பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் படித்து பார்த்து, உங்களுக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செட்டிநாடு மட்டன் குழம்பு

செட்டிநாடு மட்டன் குழம்பு

மட்டன் குழம்பு என்றாலே அது செட்டிநாட்டு மட்டன் குழம்பு தான், அந்த அளவிற்கு சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். இதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள். மேலும் இந்த குழம்பின் சுவைக்கு இணையாக வேறு எதுவும் வரமுடியாது.

செய்முறை

செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு

முட்டை குழம்பானது பல ஸ்டைலில் சமைக்கப்படும். இங்கு அதில் ஒன்றான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.

செய்முறை

செட்டிநாடு நாட்டுக்கோழி வறுவல்

செட்டிநாடு நாட்டுக்கோழி வறுவல்

செட்டிநாடு ரெசிபிக்களில் ஒன்றான நாட்டுக்கோழி வறுவல் ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் எந்த ஒரு மசாலாவும் சேர்க்காமல் செய்வது தான். இருப்பினும் இதன் சுவை அருமையாக இருக்கும்.

செய்முறை

செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன்

செட்டிநாடு ரெசிபிக்கு அளவுக்கு அதிகமாக பிரியர்கள் இருக்கிறார்கள். அதிலும் செட்டிநாடு பெப்பர் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம், அவர்கள் எதிர்பார்த்த காரத்தை விட அதிகமாகவே இருக்கும்

செய்முறை

செட்டிநாடு இறால் குழம்பு

செட்டிநாடு இறால் குழம்பு

செட்டிநாடு ஸ்டைலில் இறால் குழம்பு வைக்க தெரியுமா? தெரியாவிட்டால், அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

செய்முறை

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

பிரியாணி என்ற உணவு உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றது. அந்த பிரியாணியில் பல ஸ்டைல்கள் உள்ளன. அதிலும் செட்டிநாடு பகுதிகளில் தயாரிக்கும் பிரியாணி அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணப்படுகிறது.

செய்முறை

செட்டிநாடு மட்டன் வறுவல்

செட்டிநாடு மட்டன் வறுவல்

அசைவ உணவுகளிலேயே மட்டன் தான் உடலுக்கு குளிர்ச்சியை தருவது. அதிலும் அந்த மட்டனை செட்டிநாடு ஸ்டைலில் வறுவல் செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

செய்முறை

செட்டிநாடு வறுத்த கோழி

செட்டிநாடு வறுத்த கோழி

செட்டிநாட்டு சமையலில் பிரசித்தி பெற்றது வறுத்த கோழி மிகவும் சுவையாகவும், சாப்பிட தூண்டுவதாகவும் இருக்கும். அவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

செய்முறை

செட்டிநாடு மிளகாய் சட்னி

செட்டிநாடு மிளகாய் சட்னி

செட்டிநாடு என்றால் அனைவருக்கும் அசைவ உணவுகள் தான் ஞாபகம் வரும். ஆனால் செட்டிநாடு ஸ்டைல் மிளகாய் சட்னியை சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லையெனில் அதன் செய்முறையைப் படித்து முயற்சி செய்யுங்கள்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion