For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா முட்டை குழம்பு

By Maha
|

ஆந்திரா சமையல் அனைத்தும் மிகவும் காரமாக இருந்தாலும், ருசியாக இருக்கும். அப்படி ஆந்திராவில் பிரபலமான ஓர் ரெசிபி தான் கோங்குரா முட்டை குழம்பு. இது சற்று புளிப்பாக இருந்தாலும், சுவையாக இருக்கும்.

இங்கு ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா முட்டை குழம்பு ரெசிபியின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கோங்குரா/புளிச்சக் கீரை - 1 கட்டு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
முட்டை - 2 (வேக வைத்தது)

செய்முறை:

முதலில் புளிச்சக்கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்சக்கீரை, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, கீரை நன்கு வேகும் வரை வேக வைக்கவும்.

பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்பு அத்துடன் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதோடு மல்லித் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் சிறிது மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் வேக வைத்துள்ள 2 முட்டையை இரண்டாக வெட்டியோ அல்லது அப்படியே சேர்த்து பிரட்டி, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கோங்குரா முட்டை குழம்பு ரெடி!!!

Image Courtesy: notmyrecipesbutmyclicks

English summary

Andhra Special Gongura Egg Curry

Gongura egg curry is a popular south indian andhra dish. Tastes good with rotis, chapattis or rice. Want to know how to prepare Gongura egg curry? Check out and give it a try...
Desktop Bottom Promotion