சிக்கன் குழம்பு: பேச்சுலர் ஸ்பெஷல்

Posted By:
Subscribe to Boldsky

சிக்கன் பிரியரா நீங்கள்? அப்படியெனில் 20 நிமிடத்திலேயே சுவையான சிக்கன் குழம்பு செய்யத் தெரியுமா? இல்லையா. அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிகவும் ஈஸியாக 20 நிமிடத்திலேயே சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் சிம்பிளாக இருக்கும். சரி, இப்போது அந்த சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 20 Minute Chicken Curry Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம்

வெங்காயம் - 2 (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)

பட்டை - 2 இன்ச்

கிராம்பு - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 1 கப்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.

பின்பு அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.

அடுத்து, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின் சிக்கன் துண்டுகளை சேர்த்து ஒருமுறை பிரட்டி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கிளறிவிட்டு, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கி, வேண்டுமெனில் சிறிது தண்ஷீர் ஊற்றி, மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கினால், சிக்கன் குழம்பு ரெடி!!!

English summary

20 Minute Chicken Curry Recipe

This 20 minute chicken curry gravy is simple to prepare and is the best option when your in a hurry. It goes well with peas pulav, tomato rice and white rice. You can also enjoy it with chapatis or tandoori rotis.
Story first published: Saturday, June 6, 2015, 14:27 [IST]