Latest Updates
-
கள்ள உறவு அதிகமாக இருக்கும் இந்தியாவின் டாப் 5 நகரங்கள் - ஆய்வு சொல்லும் அதிர்ச்சிகரமான செய்தி -
செஃப் தீனா ஸ்பெஷல் கறிவேப்பிலை தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
புதன் உருவாக்கும் நீச்ச பங்க யோகத்தால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
அடை தோசையும், கத்திரிக்காய் சட்னியும் எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 04 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்...! -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் -
ஏப்ரல் மாதத்தில் 5 முறை உருவாகும் அரிய சுப யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும்! -
தஞ்சாவூர் ரோசாப்பூ கார சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
எடைக்குறைப்பு மருந்தை உட்கொள்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் - புதிய ஆய்வு சொல்வது என்ன? -
IPL 2026: சிஎஸ்கே வீரர்கள் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய சென்னையின் பிரபல தெருவோர உணவுகள்!
காரசாரமான நெல்லூர் சிக்கன் வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க
Nellore Chicken Fry Recipe in Tamil: சண்டே வருகிறது என்றாலே அனைவரும் இந்த வாரம் என்ன அசைவ உணவு சமைக்கலாம் என்றுதான் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த வாரம் நீங்கள் சிக்கன் வாங்குவதாக இருந்தால் ஒரு புதுவிதமான சிக்கனை முயற்சி செய்யுங்கள். எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் சிக்கன் செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வாரம் சிக்கன் வாங்கினால் காரசாரமான நெல்லூர் ஸ்பெஷல் சிக்கனை செய்து சாப்பிடுங்கள்.
இந்த நெல்லூர் ஸ்டைல் சிக்கன் வறுவல் காரசாரமாக இருப்பதோடு செய்வதற்கும் மிகவும் எளிதானதாக இருக்கும். இது நெய் சாதம், பிரியாணி, புலாவ் என அனைத்திற்கும் அட்டகாசமான சைடிஷாக இருக்கும். இந்த சிக்கன் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையில் இருக்கும். ஒருமுறை இதை செய்துவிட்டால் ஹோட்டல் பக்கம் போகவே மாட்டார்கள்.

உங்களுக்கு காரசாரமான நெல்லூர் சிக்கனை எடபபடி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லூர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ சிக்கன்
- 1 கப் தயிர்
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 ஸ்பூன் மல்லித்தூள்
- ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்
- தேவையான அளவு உப்பு
முழு மசாலாப் பொருட்கள்:
- 2 இன்ச் இலவங்கப்பட்டை
- 4 கிராம்பு
- 2 ஏலக்காய்
தாளிக்க:
- 1 முட்டை
- 2 வர மிளகாய்
- ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
- 10 முந்திரிப் பருப்புகள்
- 1 ஸ்பூன் சில்லி சாஸ்
- 2 ஸ்பூன் தக்காளி சாஸ்
- 2 ஸ்பூன் வினிகர்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு
செய்முறை:
- சிக்கனை நன்றாக கழுவி அதனுடன் தயிர், மிளகாய்த்தூள், தனியாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
- ஊறவைத்த மசாலாவுடனேயே சிக்கனை, அரை கோப்பை தண்ணீர் ஊற்றி, அந்தத் தண்ணீர் வற்றி கோழி நன்கு வேகும் வரை சமைக்கவும்.
- அதிக காரம் வேண்டாமென்றால் சிக்கனை ஊற வைக்காமல் வெறும் தண்ணீரில் தனியாக வேக வைக்கலாம்.
- சிக்கன் நன்றாக வெந்ததும் எலும்புகளை நீக்கிவிட்டு, சதையைச் சிறுசிறு துண்டுகளாகப் பிய்த்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அதில் முழு மசாலாப் பொருட்களைப் ஒவ்வொன்றாக போட்டு வறுக்கவும்.
- பின்னர் உடைத்த வர மிளகாய்களைச் சேர்த்து வதக்கவும்.
- மிளகாய் நிறம் மாறியதும் உதிர்த்து வைத்த சிக்கனை சேர்க்கவும். சிக்கன் மீது ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக வதக்கவும்.
- பின்னர் சிக்கன் மேல் உப்பை தூவவும். பிறகு கறிவேப்பிலை மற்றும் வறுத்த முந்திரிப் பருப்புகளைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- இறுதியாக வினிகர், தக்காளி சாஸ் மற்றும் மிளகாய் சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாற்றைப் பிழிந்தால் சுவையான நெல்லூர் சிக்கன் வறுவல் ரெடி!



Click it and Unblock the Notifications











