Latest Updates
-
நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும் சிறந்த 5 உணவுகள் - அடிக்கடி சாப்பிடுங்க -
கோடை வெயிலால் கருப்பாகாமல் இருக்கணுமா? அப்ப ஸ்கின் டாக்டர் சொல்ற இந்த 3 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க! -
வாஸ்து படி உங்க வீட்டில் இந்த இடத்தில் குப்பைத்தொட்டி இருந்தால் ஒரு ரூபாய் கூட தங்காதாம் -
World Health Day 2026: உண்மையில் சிறந்த காலை உணவு எது? விளக்கும் டாக்டர். அருண்குமார்! -
பாபா வாங்கா கணிப்பு படி 2043-க்குள் இந்த 44 நாடுகளின் தலையெழுத்து தலைகீழாக மாறப்போகுதாம் -
40 நாட்களுக்கு பின் மீன ராசியில் உதயமாகும் சனிபகவான்: ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கபோகுது! -
உடல் சூட்டைக் குறைக்கும் கம்பு கூழ் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 07 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: ஏப்ரல் 19 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
நண்டு வாங்குனா ஒரு டைம் இப்படி வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Nandu Varuval Recipe In Tamil: எப்போதும், சிக்கன், மட்டன், மீன் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நீங்கள் எப்போது நண்டு செய்தாலும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா?
அப்படியானால் ஒருமுறை இப்படி நண்டு சமைத்து சாப்பிடுங்கள். இந்த நண்டு வறுவல் சளி, இருமலில் இருந்து விடுவிப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி நண்டு செய்தால், நண்டு பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு நண்டு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நண்டு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* நண்டு - 3/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சின்ன
வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம்
மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன்பின் கழுவி வைத்துள்ள நண்டை சேர்த்து நன்கு கிளறி விட்டு, நண்டு
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி
வைத்து 10 நிமிடம் வேக வைத்து, மூடியைத் திறந்து மிளகுத் தூள் மற்றும்
கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான நண்டு வறுவல் தயார்.
Image Courtesy: www.micheltaramarcaz.ch



Click it and Unblock the Notifications







