Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
சன்டே ஸ்பெஷல்: சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்... காரசாரமான.. மட்டன் பெப்பர் மசாலா
Mutton Pepper Masala: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் செய்ய போகிறீர்களா? மட்டனை நீங்கள் வெறுமனே குழம்பு செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? இந்த வாரம் மட்டனைக் கொண்டு குழம்பு வைக்காமல், அதைக் கொண்டு மட்டன் பெப்பர் மசாலா செய்யுங்கள்.
இந்த மட்டன் பெப்பர் மசாலா சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இது தவிர, சப்பாத்தி, தோசை, பூரி ஆகியவற்றுடன் சாப்பிடவும் சூப்பராக இருக்கும். இந்த மட்டன் பெப்பர் மசாலா காரசாரமாக இருப்பதால், சளி பிடித்துள்ளவர்கள் சாப்பிட்டால், உடனே சளியில் இருந்து விடுபடலாம்.

உங்களுக்கு மட்டன் பெப்பர் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் பெப்பர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/4 கிலோ
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3-4 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* வெந்தயக்கீரை - 1 சிறிய கட்டு
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் மட்டனைக் கழுவிப் போட்டு, நிறம் மாறும் வரை நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் தககாளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி
விட வேண்டும்.
* பின் அதில் மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு
கிளறி, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் வெந்தயக் கீரை சேர்த்து நன்கு
கிளறி, 5-10 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான
தீயில் வைத்து, 6-8 விசில் விட்டு இறக்கினால், சுவையான மட்டன் பெப்பர்
மசாலா தயார்.
Image Courtesy: yummyindiankitchen



Click it and Unblock the Notifications











