ஒருமுறை மட்டன் குழம்பை இந்த பக்குவத்துல செஞ்சு பாருங்க.. இட்லி, பூரி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அள்ளும்..

Posted By:

Mutton Kuzhambu Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் மட்டன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் மட்டனைக் கொண்டு குழம்பு செய்யப் போகிறீர்களா? அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பக்குவதில் ஒருமுறை மட்டன் குழம்பை செய்யுங்கள். இந்த மட்டன் குழம்பு 20 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Mutton Kuzhambu How To Make a Mutton Kulambu In 20 Minutes

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 1 கிலோ
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - சிறிது
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறி மசாலா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* முந்திரி - 5-6
* கசகசா - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 3

செய்முறை:

* முதலில் மட்டனை நீரில் 2-3 முறை கழுவி, நீரை நன்கு வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாயை நறுக்கிப் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது மட்டனில் இருந்து நீர் விட்டு வரும், பின் அதில் மட்டன் மூழ்கும் அளவில் சுடுநீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் வருவதற்குள் மிக்சர் ஜாரில், துருவிய தேங்காய், முந்திரி, கசகசா, சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* குக்கரில் இருந்து விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கலந்து, தேவையான அளவு நீரை ஊற்றி, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து, சிறிது கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து கலந்து குக்கரை மூடி, மீண்டும் 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான மட்டன் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, October 27, 2024, 8:24 [IST]
Desktop Bottom Promotion