Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
1 கைப்பிடி முருங்கைக்கீரையும், 2 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Muttai Keerai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் வாரம் ஒருமுறையாவது கீரை செய்வீர்களா? அதுவும் முருங்கைக்கீரை உள்ளதா? ஆனால் உங்கள் பிள்ளைகள் முருங்கைக்கீரையை சாப்பிடமாட்டார்களா? அவர்களை முருங்கைகீரையை சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் அவர்களுக்கு முருங்கைக்கீரையுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்து கொடுங்கள். இப்படி பொரியலை செய்யும் போது, கீரை சாப்பிட மறுக்கும் பிள்ளைகளும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு இந்த பொரியல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்களும் இப்படியான பொரியலை செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு முட்டை முருங்கைக்கீரை பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை முருங்கைக்கீரை பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* வரமிளகாய் - 4
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* முட்டை - 2
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, மஞ்சள் தூள்,
உப்பு சேர்த்து நன்கு வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள முருங்கைக்கீரையை 2 கைப்பிடி சேர்த்து
நன்கு, 5 நிமிடம் சுருங்கி வேகும் வரை வதக்க வேண்டும்.
* கீரை நன்கு வெந்ததும், அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி
விட வேண்டும்.
* முட்டை நன்கு கீரையுடன் சேர்த்து உதிரி உதிரியாக வந்ததும், அடுப்பை
அணைத்துவிட்டு, மிளகுத் தூள் தூவி கிளறினால், சுவையான முட்டை
முருங்கைக்கீரை பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











