Latest Updates
-
5500 பணக்காரர்கள் அவர்களின் உடலை சேமிக்க பல கோடிகளை முதலீடு செஞ்சுருக்காங்க...காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
காளான் வாங்கி ஒருடைம் இப்படி செஞ்சு பாருங்க.. மட்டன் சுக்காவே தோத்துப்போயிடும்...
Mushroom Pepper Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி காளான் வாங்கி செய்வீர்களா? காளானை வாங்கினால் எப்போதும் ஒரே சுவையில் கிரேவியைத் தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான அதே சமயம் அசைவ உணவுகளே தோற்றுப்போகும் அளவில் சுவையான ஒரு காளான் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் காளான் மிளகு மசாலாவை செய்யுங்கள். இதற்கு தனியாக ஒரு பொடியை தயாரித்து செய்வதால், இதன் சுவை தனித்துவமாக இருக்கும். இந்த காளான் மிளகு மசாலா சாதம், சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு காளான் மிளகு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் மிளகு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* பட்டை - 1
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 4
* மிளகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* காளான் - 400 கிராம் (பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு,
ஏலக்காய், மிளகு, சோம்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும்
வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி
செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை
வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் பெரிய துண்டுகளாக்கி கழுவி வைத்துள்ள காளானை சேர்த்து
நன்கு 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி,
1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான காளான் மிளகு மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications











