Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
Murungai Keerai Thoran Recipe in Tamil: வாரம் ஒருமுறையாவது கீரையை உணவில் சேர்த்து வருவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கீரை செய்தாலே சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை கீரை சாப்பிட வைக்க வேண்டுமா? கீரைகளில் முருங்கைக்கீரை மிகவும் சத்தானது. அதே சமயம் எளிதில் கிடைக்கக் கூடியதும் கூட.
பொதுவாக முருங்கைக்கீரையை கூட்டு, பொரியல், சாம்பார் என்று தான் செய்வோம். ஆனால் அந்த முருங்கைக்கீரையை கேரளா ஸ்டைலில் தோரன் செய்து சாப்பிட்டுள்ளீர்களா? இப்படி செய்து, சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால், ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த பக்குவத்தில் முருங்கைக்கீரையை செய்தால், பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இதை சைடிஷாகவும் வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு முருங்கைக்கீரை தோரனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை தோரன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் முருங்கை இலைகள்
- 10 சின்ன வெங்காயம்
- 1 டீஸ்பூன் கடுகு
-1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
அரைக்க:
- 1 கப் தேங்காய்
- 2 வர மிளகாய்
- 5 பூண்டு பல்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 4 சின்ன வெங்காயம்
செய்முறை:
- ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், வர மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரடுமுரடான பேஸ்டாக அரைத்து தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் முருங்கை இலைகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும்.
- முருங்கை இலை சுருங்கும் அளவுக்கு வதங்கியதும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் அரைத்த தேங்காய் கலவையைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.
- இடையிடையே கிளறி விட்டு 5-10 நிமிடங்கள் நன்கு வதக்கவும். மசாலாவின் சுவை கீரையில் நன்கு கலக்கும் படி கிளறி அடுப்பது அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை தோரன் ரெடி. இதை சாதத்துடன் பிசைந்தோ அல்லது சைடிஷாகவோ வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











