Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
முருங்கைக்கீரையை இப்படி ஒருடைம் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
Murungai Keerai Poriyal Recipe In Tamil: உணவில் கீரையை அடிக்கடி சேர்ப்பது நல்லது. இப்படி கீரையை சேர்ப்பதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். கீரைகளில் முருங்கைக்கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. அதே சமயம் முருங்கைக்கீரை சற்று கசப்புச் சுவையுடையது. இதனால் முருங்கைக்கீரையை சாப்பிடமாட்டார்கள்.
ஆனால் இந்த கசப்புச் சுவையுடைய முருங்கைக்கீரை தான் ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. பொதுவாக முருங்கைக்கீரையை பொரியல், சாம்பார் என்று தான் செய்து சாப்பிடுவோம். இதில் பொரியல் செய்தால் தான் நிறைய பேர் சாப்பிடமாட்டார்கள். ஆனால் அந்த முருங்கைக்கீரை பொரியலுடன், வேர்க்கடலை சேர்த்து செய்யும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். ஏன் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முருங்கைக்கீரை பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* முருங்கைக்கீரை - 1 கட்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கைப்பிடி
வறுத்து பொடிப்பதற்கு...
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* துருவிய தேங்காய் - 4 ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதல் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலை தூவி, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை தெளித்து விட்டு கிளறி, மூடி வைத்து, மிதமான
தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை
சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு
வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை சேர்த்து கிளறி இறக்கி, ஒரு தட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மிளகு சேர்த்து
வறுத்து, பூண்டு பற்களை தட்டிப் போட்டு வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து, நன்கு
வறுத்து இறக்கி அதையும் குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் முதலில் வறுத்த பொருட்கள் அனைத்தையும்
சேர்த்து, கொரகொரவென்று அரைக்க வேண்டும். பின் அதில் இரண்டாவதாக
வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொரகொரவென்று
அரைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக முருங்கைக்கீரை நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள
பொடியை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி வேக வைத்து இறக்கினால், சுவையான
முருங்கைக்கீரை பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











