Latest Updates
-
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...!
உடலுக்கு வலுசேர்க்கும் முருங்கைக்கீரை பருப்பு கடையல் - எப்படி செய்யணும் தெரியுமா?
Murungai Keerai Paruppu Kadayal Recipe In Tamil: உங்கள் வீட்டில் வாரம் ஒருமுறை தவறாமல் கீரை செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கீரை சாப்பிட விரும்பமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை கீரை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து கொடுங்கள்.
இப்படி கீரையை செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கைக்கீரையை துவரம் பருப்பு சேர்த்து கடையும் போது, சுவை வேற லெவலில் இருக்கும். இந்த கடையலானது சூடான சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை பருப்பு கடையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை பருப்பு கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் 1/2 கப் துவரம் பருப்பை எடுத்து, நீரில் 2
முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, நறுக்கிய பாதி வெங்காயம், பூண்டு,
தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, குக்கரை அடுப்பில்
வைத்து, குக்கரை மூடி, 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து சுருங்க
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரைத் தெளித்து, 3-4 நிமிடம் நன்கு வேக வைக்க
வேண்டும்.
* கீரை வெந்ததும், அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி,
மிகவும் கெட்டியாக இருந்தால், 1/2 கப் நீரை ஊற்றி கலந்து, 5 நிமிடம்
நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் மத்து கொண்டு கடைந்தால், சுவையான முருங்கைக்கீரை பருப்பு
கடையல் தயார்.



Click it and Unblock the Notifications











