Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
முருங்கைக்கீரை கூட்டு
பொதுவாக முருங்கைக்கீரை கொண்டு பொரியல் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த கீரையைக் கொண்டு கூட்டு செய்யலாம் தெரியுமா?
கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. அதோடு இந்த கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவது, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும். பொதுவாக முருங்கைக்கீரை கொண்டு பொரியல் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த கீரையைக் கொண்டு கூட்டு செய்யலாம் தெரியுமா?

கீழே முருங்கைக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்கீரை - 2 கப்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* சாம்பார் பவுடர் - 1/2 டீபூன்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* பாசிப் பருப்பு - 1/8 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீபூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீபூன்
* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது)
* எண்ணெய் - 2 டீபூன்
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
அரைப்பதற்கு...
* தேங்காய் - 2 1/2 டேபிள் பூன்
* சீரகம் - 1/2 டீபூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* பின்னர் குக்கரில் வறுத்த பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பைப் போட்டு, 1 கப் நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் சிறிது நீர் சேர்த்து, மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு முருங்கைக்கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் தக்காளியைப் போட்டு மென்மையாக வதக்க வேண்டும்.
* பின் அதில் முருங்கைக்கீரை, மஞ்சள் தூள், சாம்பார் பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி மூடி வைத்து, கீரை நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும்.
* கீரை நன்கு வெந்துவிட்டால், அதன் நிறம் சற்று மாறியிருக்கும். இப்போது வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்ர்த்து, சில நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க விடவும்.
* மறுபுறம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* இறுதியில் தாளித்த கலவையை கீரையுடன் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால், முருங்கைக் கீரை கூட்டு தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











