அடுத்தமுறை உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது இந்த ஒரு பொருளை சேத்துக்கோங்க.. சுவை இன்னும் அள்ளும்...

Posted By:

Pepper Potato Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? உங்கள் வீட்டில் சப்பாத்தி என்றாலே உருளைக்கிழங்கு மசாலா தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே ஸ்டைலில் உருளைக்கிழங்கு மசாலா செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை உருளைக்கிழங்கு மசாலாவை செய்வதாக இருந்தால், மிளகு உருளை மசாலா செய்யுங்கள்.

இந்த மிளகு உருளை மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். அதுவும் சளி பிடித்திருக்கும் போது இந்த மிளகு உருளை மசாலாவை செய்தால், சளி விரைவில் முறிந்து வெளியேறி, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Milagu Uruzhai Masala: How To Make A Pepper Potato Gravy Recipe

உங்களுக்கு மிளகு உருளை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு உருளை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு - 2
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலிலில் மிக்சர் ஜாரில் மிளகை போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் வெங்காயம், தக்காளியை வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி, வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து நன்கு கிளறி, மென்மையாகும் வரை மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிற்கு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும், மீதமுள்ள மிளகுத் தூளை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மிளகு உருளை மசாலா தயார்.

Image Courtesy: kowsisfoodbook

[ of 5 - Users]
Story first published: Wednesday, February 14, 2024, 19:39 [IST]
Desktop Bottom Promotion