Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
இட்லிக்கு எப்பவும் ஒரே சட்னியை செய்யாம.. ஒரு டைம் இந்த மிளகு சட்னியை ட்ரை பண்ணுங்க.. அடிக்கடி செய்வீங்க..
Milagu Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு எப்போதும் போல் வழக்கமாக செய்யக்கூடிய தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னியை தான் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? சற்று வித்தியாசமான, அதே சமயம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வகையில் ஒரு சட்னியை செய்ய நீங்கள் தயாரா?
அப்படியானால் மிளகு சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி நன்கு காரசாரமாக இருப்பதோடு, சளி பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இந்த சட்னி இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு மிளகு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* வெந்தயம் - 20
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 5
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு....
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் . 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாய், வெந்தயம், மிளகு சேர்த்து நன்கு பச்சை
வாசனை போக வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வறுத்த பொருட்களை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள மீதமுள்ள எண்ணெயில் தக்காளியை சேர்த்து
கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் நன்கு தக்காளியின் பச்சை வாசனை போக வேக
வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்த 2 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மிளகு, வெந்தயம், வரமிளகாய் பொருட்களை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் வதக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கிளறினால், சுவையான மிளகு சட்னி தயார்.
Image Courtesy: Swasthi's Recipes



Click it and Unblock the Notifications











