மீல்மேக்கரை இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்...

Posted By:

Mealmaker Thokku Recipe In Tamil: இரவு சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் ஒரு அசைவ ரெசிபியின் சுவையைக் கொடுக்கும் ஒரு சைவ ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு தொக்கு செய்யுங்கள். இந்த மீல்மேக்கர் தொக்கு சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Mealmaker Thokku How To Make a Mealmaker Thokku Recipe

தேவையான பொருட்கள்:

* மீல் மேக்கர் - 1 கப்
* சுடுநீர்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரை எடுத்து, அதில் சுடுநீரை ஊற்றி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து, நீரை வடிகட்டிவிட்டு, குளீர்ந்த நீரால் 2 முறை அலசிவிட்டு, அதில் உள்ள அதிகப்படியான நீரை கைகளால் பிழிந்துவிட்டு, கத்தியால் துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் துண்டுகளாக்கப்பட்ட மீல்மேக்கர், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3-4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த மீல் மேக்கரை மட்டும் சேர்த்து, நன்கு சுண்ட 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குக்கரை உள்ள மசாலா நீரை ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான மீல்மேக்கர் தொக்கு தயார்.

Image Courtesy: Madras Virunthu

[ of 5 - Users]
Story first published: Wednesday, June 12, 2024, 20:01 [IST]
Desktop Bottom Promotion