Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
மாங்காய் இருந்தா.. இப்படி ஒருடைம் சட்னி செய்யுங்க.. இட்லி, தோசை, சப்பாத்திக்கு சும்மா அள்ளும்...
Mango Chutney Recipe In Tamil: கோடைக்காலம் என்பதால் மாங்காய் சீசன் தொடங்கியிருக்கும். மார்கெட்டுகளில் மாங்காய் விலைக்குறைவில் விற்கப்படும். நீங்கள் மாங்காய் பிரியர் என்றால், நிச்சயம் மாங்காயை வாங்கி அதைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்து சாப்பிட நினைப்பீர்கள். இதுவரை நீங்கள் மாங்காயைக் கொண்டு ஊறுகாய், தொக்கு, சாம்பார் என்று செய்திருப்பீர்கள்.
ஆனால் அந்த மாங்காயைக் கொண்டு சட்னி செய்திருக்கிறீர்களா? இல்லையா? அப்படியானால் ஒருமுறை மாங்காயை வாங்கினால், தவறாமல் சட்னி செய்யுங்கள். இந்த மாங்காய் சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமா இந்த சட்னி 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இட்லி, தோசைக்கு புளிப்பான சட்னி பிடிக்குமானால், தக்காளி சட்னியை தவிர, மாங்காய் சட்னியையும் செய்து தரலாம். இந்த மாங்காய் சட்னியை பேச்சுலர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர காலத்தில் டக்கென்று சமையலை முடிக்க உதவியாக இருக்கும்.
உங்களுக்கு மாங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 3
* மாங்காய் - 1
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 5 பல்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் தக்காளிகளை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்
மாங்காயை இரண்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தக்காளி, மாங்காய், துண்டுகளாக்கப்பட்ட பச்சை
மிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* காய்கறிகள் வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதன் பின் மிக்சர் ஜாரில் வேக வைத்த தக்காளி, பச்சை மிளகாய்,
பூண்டு பற்களை சேர்த்து, மாங்காயின் தசைப்பகுதியை மட்டும் ஒரு ஸ்பூன்
கொண்டு எடுத்து சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், உப்பு மற்றும்
கொத்தமல்லியை சேர்த்து, நன்கு அரைத்து இறக்கினால், சுவையான மாங்காய்
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











