Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஒரே மாதிரி சாம்பார் வெச்சு போரடிக்குதா? அப்ப ஒருமுறை இப்படி சாம்பார் செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Manga Paruppu Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சாம்பார் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சாம்பார் செய்ய நினைக்கிறீர்களா? தற்போது மாங்காய் சீசன் ஆரம்பித்துவிட்டதால், அந்த மாங்காயைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் பருப்பு குழம்பு செய்யுங்கள்.
இந்த பருப்பு குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த பருப்பு குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் மாங்காய் பருப்பு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்காய் பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* மாங்காய் - 1 (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/4
* பெருங்காயத் தூள் - சிறிது
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4-5 பல் (தட்டிக் கொள்ளவும்)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* மிளகாய் தூள் - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை எடுத்து, அதை நீரில் 2 முறை
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் 2 கப் நீரை ஊற்றி, அத்துடன் நறுக்கிய மாங்காய்,
வெங்காயம், தக்காளியை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை உடைத்து போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்
தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, குக்கரை
அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டி வைத்துள்ள பூண்டு
பற்கள், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து, வெங்காயம் நன்கு வதங்கும்
வரை வதக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 2 சிட்டிகை மிளகாய் தூள் சேர்த்து கிளறி, கொதித்துக்
கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான மாங்காய் பருப்பு குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











