Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மதுரை ரோட்டுக்கடை தண்ணி சட்னி ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்...!
Madurai Style Thanni Chutney Recipe in Tamil: மல்லிகை பூ என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது மதுரை தான். மணமணக்கும் மல்லிக்கு பெயர் பெற்ற மதுரைக்கு தூங்க நகரம் என்று ஒரு பெயர் இருப்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அதற்கு காரணம் நள்ளிரவு நேரத்தில் கூட அங்கு சாப்பிட உணவு வகைகள் கிடைக்கும் என்பதால் தான்.
அங்கு கிடைக்கும் உணவின் சுவையை பற்றி குறிப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள். சைவம் அசைவம் என எதுவும் அருமையான சுவையில் கிடைக்கும். அந்த சைவ உணவுகளின் வரிசையில் பெயர் பெற்ற மதுரை தண்ணி சட்னி எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- பச்சை மிளகாய் - 4
- வரமிளகாய் - 2
- பூண்டு - 7 பல்
- இஞ்சி - சிறிதளவு (½ இஞ்ச் அளவு)
- பெரிய வெங்காயம் - 3
- பொட்டுக்கடலை - ½ கப்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- மண் இல்லாமல் இஞ்சியை அலசி தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
- பூண்டு பற்களை தோல் உரித்து எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும். அதில் பூண்டை சேர்த்து நன்கு கிளறவும்.
- அதனுடன் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின் இவற்றை நன்கு ஆற வைக்கவும். சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சேர்க்கவும்.
- அதனுடன் பொட்டுக்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடும். அதனுடன் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் தோல் உரித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின் அடுப்பை அணைத்து பெருங்காயத்தை சேர்த்து கிளறவும்.
- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான மதுரை தண்ணி சட்னி தயார்!



Click it and Unblock the Notifications











