இட்லிக்கு தக்காளி சேர்க்காம மதுரை கார சட்னியை செஞ்சு சாப்பிடுங்க.. ருசி வேற லெவல்-ல இருக்கும்...

Posted By:

Madurai Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு கார சட்னி செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் வீட்டில் தக்காளி இல்லையா? அப்படியானால் கவலை வேண்டாம், தக்காளி சேர்க்காமல் மதுரை ஸ்பெஷல் கார சட்னியை செய்யுங்கள்.

இந்த சட்னிக்கு தக்காளி எதுவும் தேவையில்லை, வெங்காயம், பூண்டு, வரமிளகாய் இருந்தாலே போதும். இந்த கார சட்னி காலையில் வேகமாக செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

Madurai Kara Chutney How To Make a Madurai Kara Chutney Recipe

உங்களுக்கு மதுரை கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 30/ பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 10 பல்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும்.
* பின் அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் வெங்காயத்தை சேர்த்து, வேகமாக வெங்காயம் வதங்குவதற்காக சிறிது உப்பு தூவி லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் கொத்தமல்லியை சேர்த்து 15 நொடிகள் வதங்கும் வரை வதக்கி, பெருங்காயத் தூளை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான மதுரை கார சட்னி தயார்.

Image Courtesy: Today's Samayal

[ of 5 - Users]
Story first published: Monday, June 3, 2024, 7:55 [IST]
Desktop Bottom Promotion