Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
லெமன் சட்னி
இதுவரை நீங்கள் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி, காரச்சட்னியை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் லெமன் சட்னி அல்லது எலுமிச்சை சட்னியை செய்து சுவைத்ததுண்டா?
காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சட்னி செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? இதுவரை நீங்கள் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி, காரச்சட்னியை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் லெமன் சட்னி அல்லது எலுமிச்சை சட்னியை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், இன்று நீங்கள் லெமன் சட்னி செய்து சுவையுங்கள்.

உங்களுக்கு லெமன் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே லெமன் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பெரிய எலுமிச்சையாக இருந்தால் ஒன்று போதும். இல்லாவிட்டால் 2 எலுமிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் பூண்டு பற்களை நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பிறகு அதில் கடுகு சேர்த்து தாளித்து, தட்டி வைத்துள்ள பூண்டு பற்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் தாளித்ததை சட்னியில் சேர்த்து கலந்தால், சுவையான லெமன் சட்னி/எலுமிச்சை சட்னி தயார்.
குறிப்பு:
* காரத்திற்கு ஏற்ப உங்களுக்கு தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ரெசிபியில் காஷ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அது அதிக காரம் இருக்காது. அதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.
* சட்னி மிகவும் புளிப்பாக இருப்பது போல் உணர்ந்தால், அதற்கேற்ப மிளகாய் தூள் மற்றும் உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
* முக்கியமாக இந்த ரெசிபிக்கு நல்லெண்ணெயை தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது தான் இந்த ரெசிபியின் கார அளவைக் குறைத்து, சுவையைக் கூட்டுகிறது.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











