கோவைக்காயை இப்படி பக்கோடா செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...

Posted By:

Kovakkai Pakoda Recipe In Tamil: தற்போது பனி அதிகம் பொழிகிறது. காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, நன்கு மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பலரும் வீட்டில் உள்ள வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு தான் பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிடுவார்கள்.

சற்று வித்தியாசமாக சாப்பிட நினைத்தால், வீட்டில் கோவைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சூப்பர் ஸ்நாக்ஸ் செய்யுங்கள். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கோவைக்காய் என்றாலே முகம் சுளிப்பார்களா? அப்படிப்பட்டவர்களுக்கு கோவைக்காயைக் கொண்டு ஒருமுறை பக்கோடா செய்து கொடுங்கள், பின் பாருங்கள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இப்படி கோவைக்காயை செய்யும் போது எவ்வளவு செய்தாலும் நொடியில் காலி செய்வார்கள்.

Kovakkai Pakoda How To Make a Crispy Ivy Gourd Pakoda

உங்களுக்கு கோவைக்காய் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கோவைக்காய் - 1 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடலை மாவு - 1/3 கப்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் கோவைக்காயை நீரில் கழுவி, முனைகளை நீக்கிவிட்டு, நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கோவைக்காயை போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/4 கப் அரிசி மாவு, 1/3 கப் கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து, பிரட்டி விட வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை தெளித்து பக்கோடா பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள கோவைக்காயை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான கோவைக்காய் பக்கோடா தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, January 3, 2026, 19:32 [IST]
Desktop Bottom Promotion