Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
மழை நேரத்தில் கேரளா ஸ்டைல் தட்டுக்கடை சிக்கன் ப்ரையை செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Kerala Style Thattukadai Chicken Fry Recipe In Tamil: உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால், எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் ப்ரை அல்லது சிக்கன் 65 தான் செய்து சாப்பிடுவீர்களா? தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், இந்த காலநிலையில் நன்கு காரசாரமாகவும், வாய்க்கு ருசியாகவும் சிக்கனை செய்து சாப்பிட நினைத்தால், கேரளா ஸ்டைல் தட்டுக்கடை சிக்கன் ப்ரை செய்து சாப்பிடுங்கள்.
இதில் சேர்க்கப்படும் மசாலா மற்றும் அதை செய்யும் விதம், நாவில் எச்சில் ஊறும் வகையில் பார்த்ததும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதுவும் இந்த சிக்கன் ப்ரையை வெறுமனே சாப்பிடலாம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம். ஒருமுறை இந்த சிக்கன் ப்ரையை செய்தால், பின் நிச்சயம் வாரம் ஒருமுறை இந்த சிக்கன் ப்ரையை செய்வீர்கள்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் தட்டுக்கடை சிக்கன் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் தட்டுக்கடை சிக்கன் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா பேஸ்ட்டிற்கு...
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 5
* இஞ்சி - 1 துண்டு
* காஷ்மீரி வரமிளகாய் - 2-3
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - 1 கையளவு
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 400 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை - 1/2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 1
ப்ரை செய்வதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 4-5 (கீறியது)
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை
மிளகாய், காஷ்மீரி வரமிளகாய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொண்டு,
அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு, பாதி
எலுமிச்சையின் சாறு, சோம்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகுத் தூள்,
சோம்புத் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, அரிசி மாவு மற்றும் ஒரு
முட்டையை சேர்த்து, கைகளால் நன்கு பிரட்டி, மூடி வைத்து 2 மணிநேரம் ஊற
வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில்
வைத்து முதலில் ஒரு பக்கம் ப்ரை செய்ய வேண்டும்.
* அதற்குள் மீந்து போயிருக்கும் சிக்கன் ஊற வைத்த மசாலாவில்
கறிவேப்பிலை, 4-5 கீறிய பச்சை மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் துருவிய
தேங்காய் சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனை திருப்பிப் போட்டு, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும்,
அதில் இந்த தேங்காய் மசாலாவை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட்டு
வேக வைத்து வேண்டும். சிக்கன் நன்கு வெந்துவிட்டால், அதை இறக்கினால்,
சுவையான கேரளா ஸ்டைல் தட்டுக்கடை சிக்கன் ப்ரை தயார்.



Click it and Unblock the Notifications











