Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கேரளா ஸ்டைல் முட்டைக்கறி ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்...!
Kerala Style Mutta Curry Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போதும் முட்டையை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? கேரளாவுக்கு சென்றால் அங்கு அனைத்து ஹோட்டல்களிலும் பிரதானமாக இருக்கு ஒரு உணவென்றால் அது ஆப்பம்-முட்டைக் கறிதான். இந்த முட்டைக் கறி மற்ற முட்டை குழம்புகளை போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக அட்டகாசமாக இருக்கும்.
இந்த முட்டைக்கறி ஆப்பத்துக்கு மட்டுமின்றி புரோட்டா, தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும், இந்த முட்டைக்கறியை சாப்பிட நீங்கள் கேரளாவுக்குத்தான் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. அதை நாம் வீட்டிலேயே மிகவும் எளிதாக செய்து விடலாம். இந்த முட்டைக்கறியை செய்வதற்கு மிகவும் அவசியமான ஒரு பொருளென்றால் அது திக்கான தேங்காய்ப்பால்தான்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் முட்டைக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் முட்டைக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 முட்டை
- ¼ டீஸ்பூன் கடுகு
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 3 பச்சை மிளகாய்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 ½ டீஸ்பூன் கரம் மசாலா
- ½ டீஸ்பூன் சீரகத் தூள்
- 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 1 தக்காளி நறுக்கியது
- 2 கப் திக்கான தேங்காய் பால்
- தேவையான அளவு உப்பு
- தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
செய்முறை:
- முதலில் முட்டையை மூழ்கும் அளவு தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து உரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை வாணலியில் சேர்க்கவும்.
- உப்பு வெங்காயத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி வெங்காயம் வேகமாக வேக உதவுகிறது. வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும்.
- பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறவும்.
- பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா மற்றும் பெருஞ்சீரக தூள் சேர்க்கவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து மசாலாவுடன் நன்றாக கிளறவும்.
- தக்காளி வெந்தவுடன் எடுத்து வைத்திருக்கும் திக்கான தேங்காய்ப்பாலை சேர்க்கவும், பின்னர் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு கிளறவும்.
- மசாலா நன்கு கொதி வந்ததும் வேகவைத்த முட்டையை சேர்த்து முட்டை உடையாமல் நன்கு கிளறவும்.
- கிரேவி நன்கு கொதித்து திக்கானதும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் முட்டைக்கறி ரெடி!



Click it and Unblock the Notifications











