கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...!

Posted By:

Kerala Kootu Curry Recipe in Tamil: அமாவாசை வந்தாலே பெரும்பாலான மக்களின் வீடுகளில் வெள்ளை பூசணிக்காயை செய்வார்கள். வெள்ளைப் பூசணிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. பெரும்பாலான மக்கள் வெள்ளை பூசணியைக் வைத்து சாம்பர்தான் செய்வார்கள். ஆனால் வெள்ளை பூசணியை வைத்து பல வித்தியாசமான சூப்பரான உணவுகளை செய்யலாம். அதில் ஒன்றுதான் கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கூட்டு கறி.

உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வெள்ளை பூசணியை சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு இந்த கூட்டுக்கறி செய்து கொடுங்கள். இப்படி செய்து கொடுத்தால் பூசணிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பூசணிக்காய் கூட்டு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த பூசணிக்காய் கூட்டு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

Kerala Kootu Curry Recipe How to Make Kerala Kootu Curry

உங்களுக்கு கேரளா ஸ்டைல் வெள்ளை பூசணி கூட்டுக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கூட்டுக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- அரை கப் கொண்டைக்கடலை
- 2 வாழைக்காய்
- 1 கப் பூசணிக்காய்
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் உப்பு
- 1 ஸ்பூன் வெல்லம்
- அரை ஸ்பூன் மிளகு

அரைக்க:

- ½ கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 பச்சை மிளகாய்

தாளிக்க:

- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- அரை ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 2 காய்ந்த மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் துருவிய தேங்காய்

செய்முறை:

- கொண்டைக்கடலையைக் கழுவி, இரவிலேயே அல்லது குறைந்தது 8 மணி நேரமாவது தண்ணீரில் ஊறவைக்கவும்.

- வாழைக்காய் மற்றும் பூசணிக்காயின் தோலை நீக்கி, அவற்றைச் சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை நன்கு கழுவி, சமைக்கத் தயாராகும் வரை நீரில் ஊறவைத்து வைக்கவும்.

- ஊறவைத்த கொண்டைக்கடலையில் இருந்து தண்ணீரை வடிகட்டவும். கொண்டைக்கடலையை ஒரு குக்கரில் சேர்த்து அதில் மூழ்கும் அளவு தண்ணீரும், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்துக் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- நறுக்கிய வாழைக்காய் மற்றும் பூசணிக்காயை, கனமான அடிப்பாகம் கொண்ட ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ½ கப் தண்ணீர் சேர்க்கவும். காய்கறிகள் மென்மையாக வேகும் வரை அவற்றை வேக வைக்கவும்.

- காய்கறிகள் வெந்துகொண்டிருக்கும்போது, ​​துருவிய தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.

- இவை அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கெட்டியான மற்றும் மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

- காய்கறிகள் வெந்ததும், வேகவைத்த கொண்டைக்கடலையை பாத்திரத்தில் சேர்த்து நன்கு கிளறவும்.

- பின்னர், தேங்காய் மசாலா விழுதைச் சேர்த்து, நன்றாகக் கிளறவும். பின் உப்பு, மிளகுத்தூள் மற்றும் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறவும்.

- கூட்டுக்கறி ஒரு கொதி வரும் வரை கொதிக்கவிட்டு, பின்னர் அடுப்பை அணைக்கவும்.

- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்த்து, அது வெடித்துப் பொரியும் வரை காத்திருக்கவும்.

- பின்னர் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு கிளறிவிடவும். இறுதியாகத் துருவிய தேங்காயைச் சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

- இந்த தாளிப்பை கூட்டுக்கறியில் சேர்த்து நன்கு கிளறினால் சூப்பரான கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கூட்டுக்கறி ரெடி!

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 18, 2026, 8:00 [IST]
Desktop Bottom Promotion