Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கத்திரிக்காய் காரக்குழம்பை இந்த ஒரு மசாலா சேர்த்து செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Katharikkai Karakuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் காரக்குழம்பை விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் அடிக்கடி காரக்குழம்பை செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காயைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று கத்திரிக்காய் காரக்குழம்பை செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள். இந்த காரக்குழம்பின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் ஒரு குழம்பு மசாலா தான். இப்படி காரக்குழம்பை செய்யும் போது, சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு கத்திரிக்காய் காரக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் காரக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கத்திரிக்காய் - 5 (நீளவாக்கில் நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* தண்ணீர் - தேவையான அளவு
* வெல்லம் - 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
குழம்பு மசாலாவிற்கு...
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கடலை மாவு - 1/4 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1/4 டேபிள் ஸ்பூன்
* வெந்தயத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கத்திரிக்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு
மசாலா ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தக்காளி, பூண்டு, துருவிய தேங்காய், சீரகம்,
மிளகு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை வதங்கிக் கொண்டிருக்கும் கத்திரிக்காயுடன் சேர்த்து
கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து, குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி
கிளறி, வெல்லத்தை சேர்த்து கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் பச்சை
வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய்
காரக்குழம்பு தயார்.
குறிப்பு: ஸ்பெஷல் காரக்குழம்பு மசாலாவை தயாரிக்க மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், கடலை மாவு, அரிசி மாவு மற்றும் வெந்தயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த மசாலாவை அனைத்துவிதமான காரக்குழம்பிற்கும் பயன்படுத்தலாம். இதனால் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











