Latest Updates
-
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க! -
வெயில் காலத்தை சமாளிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மாற்றப்போகும் ஸ்டார் வேட்பாளர்களும் அவர்களின் தொகுதிகளும் -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடங்களில் மருந்துகளை வெச்சு யூஸ் பண்ணாதீங்க, இல்ல மருத்துவ செலவு அதிகரிக்கும்! -
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நுங்கு சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும் சிறந்த 5 உணவுகள் - அடிக்கடி சாப்பிடுங்க -
கோடை வெயிலால் கருப்பாகாமல் இருக்கணுமா? அப்ப ஸ்கின் டாக்டர் சொல்ற இந்த 3 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க! -
வாஸ்து படி உங்க வீட்டில் இந்த இடத்தில் குப்பைத்தொட்டி இருந்தால் ஒரு ரூபாய் கூட தங்காதாம் -
World Health Day 2026: உண்மையில் சிறந்த காலை உணவு எது? விளக்கும் டாக்டர். அருண்குமார்! -
பாபா வாங்கா கணிப்பு படி 2043-க்குள் இந்த 44 நாடுகளின் தலையெழுத்து தலைகீழாக மாறப்போகுதாம்
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Karnataka Capsicum Tomato Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது நாளை காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? எப்போதும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் குடைமிளகாயும், தக்காளியும் உள்ளதா? அப்படி இருந்தால் சூப்பரான கர்நாடகா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சட்னியை செய்து விடலாம்.
இதுவரை நீங்கள் வழக்கமான தக்காளி சட்னியைத்தான் இட்லி, தோசைக்கு செய்திருப்பீர்கள். ஆனால் இந்த கர்நாடகா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சட்னி வழக்கமான தக்காளி சட்னி போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த குடைமிளகாய் தக்காளி கார சட்னி கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வதும் மிகவும் எளிதானது.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் தக்காளி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 4 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
- 2 பூண்டு பல், நறுக்கியது
- ½ வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 தக்காளி, பொடியாக நறுக்கியது
- 1 குடைமிளகாய், நறுக்கியது
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- சிறிது கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வர மிளகாயைச் சேர்க்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின்னர், நறுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பூண்டின் பச்சை வாசனை போகும் வரை, ஒரு நிமிடம் வறுக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடிப் பதத்திற்கு வரும்வரை வதக்கவும்.
- பின் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அவை மென்மையாகி நன்கு வேகும்வரை வதக்கவும்.
- இறுதியாக, குடைமிளகாயத்தைச் சேர்த்து, அது சுருங்கும்வரை வதக்கவும். குடைமிளகாய் வேக அதிக நேரம் எடுக்காது. எனவே 1 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும்.
- இந்த கலவையை நன்கு ஆற வைக்கவும்.
- நன்கு ஆறியதும் அவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து, சிறிதளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதனுடன் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- கடுகு வெடித்ததும், கறிவேப்பிலையைச் சேர்த்து, அந்தத் தாளிப்பைச் சட்னியின் மேல்கொட்டி கிளறவும்.
- அவ்வளவுதான் சுவையான கர்நாடகா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெடி. இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











