Latest Updates
-
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...!
காரைக்குடி தக்காளி சட்னி: இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் காரைக்குடி தக்காளி சட்னி செய்வது எப்படி?
தமிழ்நாட்டின் பிரதானமான காலை மற்றும் இரவு உணவு என்னவென்றால் அது இட்லி மற்றும் தோசைதான். சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன்களை செய்ய அதிக நேரம் தேவைப்படும். இட்லி மற்றும் தோசைக்கு சிறந்த சைடிஷ் என்றால் அது சட்னிதான். ஆனால் வழக்கமான சட்னிகளுக்குப் பதிலாக புதுப்புது சட்னிகளை முயற்சி செய்யும்போது வீட்டிலிருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் அதிகமாக சாப்பிடுவார்கள்.
சட்னி வகைககளில் காரைக்குடி சட்னிகளுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. காரைக்குடி என்றாலே அது சுவையான உணவுகளுக்கு பெயர் போன ஊராகும். காரைக்குடி உணவுகளுக்கென்று தனி அடையாளமும், சிறப்பும் உண்டு. அந்த வகையில் காரைக்குடி தக்காளி சட்னி இட்லி, தோசை மற்றும் பொங்கலுக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும். நாட்டு தக்காளியை பயன்படுத்தி இந்த சட்னியை செய்யும்போது அதன் சுவை கூடுதலாக இருக்கும். இந்த சுவையான தக்காளி சட்னியை எப்படி டக்குனு செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
பழுத்த நாட்டு தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 1
வரமிளகாய் - 3
காஷ்மீர் மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடலைப் பருப்பு - 4 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காரைக்குடி தக்காளி சட்னி செய்வது எப்படி?
- ஒரு பாத்திரத்தில் பாதி எண்ணெயை சூடாக்கவும்.
- அதன்பின் கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய், புளி ஆகியவற்றை நன்கு
வதக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- பின்னர் அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து
3-4 நிமிடங்கள் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இந்த
கட்டத்தில் உப்பு சேர்த்து வதக்கவும்
- இப்போது நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மேலும் 3-4 நிமிடங்கள்
தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
- இந்த கலவையை நன்கு குளிர வைக்கவும்.
- வதக்கிய மிளகாய், பருப்பு மற்றும் புளி ஆகியவற்றை கொரகொரவென
அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வெங்காயம், பூண்டு கலவையை சேர்த்து மீண்டும் சில நொடிகள்
அரைக்கவும்.
- இப்போது வதக்கிய தக்காளி மற்றும் வெல்லத்தை சேர்த்து அதில் தேவையான
தண்ணீர் சேர்க்கவும்.
- இப்போது மீதமுள்ள எண்ணெயை தாளிக்க பயன்படுத்தவும். எண்ணெயை சூடாக்கி
கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து
சட்னியில் ஊற்றவும்
- இப்போது சுவையான காரைக்குடி தக்காளி சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை
மற்றும் பொங்கலுடன் சேர்த்து மகிழ்ச்சியாக சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications











