Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
இட்லி, தோசைக்கு கார சட்னியை ஒருடைம் இப்படி செய்யுங்க.. சட்னிக்காகவே இட்லியை எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Hotel Style Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? இதனால் ஒவ்வொரு நாளும் அதற்கு சைடு டிஷ்ஷை தேர்வு செய்வதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? உங்களுக்காகவே ஒவ்வொரு நாளும் உங்களின் வேலையை சுலபமாக்கும் வகையில் சட்னிக்களை பகிர்ந்து வருகிறோம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது ஹோட்டல் ஸ்டைல் கார சட்னியைத் தான். கார சட்னியை பலவிதத்தில் செய்யலாம். அதுவும் ஹோட்டல்களில் கொடுக்கப்படும் கார சட்னியின் சுவையே தனி தான். அந்த சட்னியை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்யுங்கள். வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 10
* பூண்டு - 5 பல்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் தக்காளி, புளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது உப்பு தூவி
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து தாளித்து, சட்னியை ஊற்றி, 1 நிமிடம் கிளறி விட்டு வேக வைத்து
இறக்கினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











