Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி கார சட்னியை செய்யாம.. இந்த மாதிரியும் செய்யுங்க.. டேஸ்டியா இருக்கும்...
1 Minute Kara Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்ததுமே என்ன காலையில் சமைப்பது என்ற புலம்பல் ஆரம்பித்துவிடும். என்ன தான் பெரும்பாலான வீடுகளில் காலையில் இட்லி, தோசை காலை உணவாக இருந்தாலும், அந்த இட்லி தோசைக்கு செய்யும் சட்னியை முடிவு செய்வது இன்னும் பெரிய வேலை.
உங்கள் வீட்டில் உள்ளோர் எப்போதும் இட்லி, தோசைக்கு சற்று காரமாகவும், புளிப்பாகவும் தான் சட்னி சாப்பிட விரும்புவார்களா? இதனாலேயே நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி கார சட்னி, தக்காளி சட்னி என்று செய்வீர்களா? அப்படியானால் இன்று கார சட்னியை செய்வதாக இருந்தால், நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாதீர்கள்.

மாறாக சட்டென்று 1 நிமிடத்தில் செய்யக்கூடிய ஸ்டைலில் முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி செய்வதற்கு 1 நிமிடமே ஆகும். அந்த அளவில் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். அதுவும் வேலைக்கு செல்வோர், பேச்சுலர்கள் போன்றோருக்கு ஏற்ற சட்னி இது.
உங்களுக்கு 1 மினிட் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே 1 மினிட் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 2
* தக்காளி - 3
* பூண்டு - 5 பல்
* வரமிளகாய் - 5
* புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வரமிளகாய்,
பூண்டு, புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை வாணலியில் ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி,
ஒரு கொதி விட்டு இறக்கினால், 1 மினிட் கார சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











