Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி தெரியுமா?
உங்கள் வீட்டில் உள்ளோர் சேனைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அதைக் கொண்டு ஒரு சுவையான ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவலை செய்யுங்கள். இந்த வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். சில சமயங்களில் இதை அப்படியே கூட சாப்பிடலாம்.
முக்கியமாக இந்த சேனைக்கிழங்கு வறுவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். உங்களுக்கு கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு - 250 கிராம்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் 1/4 கப் நீரை
ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில்
வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள்
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சாம்பார் தூள்
சேர்த்து சில நொடிகள் வறுத்து, வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து,
சிறிது உப்பைத் தூவி நன்கு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
* கிழங்கு நன்கு ட்ரையாகி, கிழங்குடன் மசாலா அனைத்தும் ஒன்று
சேர்ந்ததும், அதில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி
இறக்கினால், கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











