இட்லி, தோசைக்கு இந்த சூப்பரான கதம்ப சட்னியை ட்ரை பண்ணி பாருங்க... எல்லோரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...!

Posted By:

Kadamba Chutney Recipe in Tamil: தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சரியான மற்றும் எளிமையான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். சூடான இட்லி, தோசையுடன் சட்னி வைத்து சாப்பிடுவது அலாதி இன்பம்தான். நம் காலை உணவை சிறப்பாக்குவதே அதற்கு பரிமாறப்படும் சட்னிதான்.

பொதுவாக இட்லி, தோசைக்கு அரைக்கப்படும் சட்னி என்றால் அது தேங்காய் அல்லது கார சட்னிதான். ஆனால் இந்த சட்னிகள் நிச்சயம் காலப்போக்கில் போரடிக்கத் தொடங்கும். எனவே இதனை சமாளிக்க புதுப்புது சட்னிகளை முயற்சிக்க வேண்டும். அப்படி நீங்கள் முயற்சிக்கக் கூடிய ஒரு சுவையான புதிய சட்னிதான் கதம்ப சட்னி.

Kadamba Chutney Recipe How to Prepare Kadamba chutney

வழக்கத்திற்கு மாறாக அதிக பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சட்னி கூடுதல் சுவையுடன் இருக்கும் மற்றும் சூடான இட்லி, தோசைக்கு சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். இந்த பதிவில் சூப்பரான கதம்ப சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

- பெரிய வெங்காயம் - 1
- பெரிய தக்காளி - 1
- பூண்டு - 4 பல்
- நறுக்கிய இஞ்சி - 2 ஸ்பூன்
- புளி - சிறிதளவு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
- புதினா இலை - 1 கைப்பிடி
- பச்சை மிளகாய் - 1
- சிவப்பு மிளகாய் - 1
- துருவிய தேங்காய் - ¼ கப்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 ஸ்பூன்

தாளிக்க:

- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - ½ ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

- வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். சட்னிக்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். முதலில் வர மிளகாயை போட்டு வதக்கவும்.

- பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் புளி சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.

- பின்னர் தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

- பின்னர் இதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.

- தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

- பின்னர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

- சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

- பின்னர் இதை சட்னியின் மீது கொட்டி நன்கு கிளறவும்.

- இந்த கதம்ப சட்னி இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 8, 2025, 22:25 [IST]
Desktop Bottom Promotion