Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
கடலை பருப்பு புடலங்காய் கூட்டு
Kadalai Paruppu Pudalangai Kootu: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வித்தியாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா?
உங்கள் வீட்டில் புடலங்காய் மற்றும் கடலைப் பருப்பு உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு ஒரு கூட்டு செய்யுங்கள். இந்த கடலைப் பருப்பு புடலங்காய் கூட்டு சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கூட்டு விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு கடலை பருப்பு புடலங்காய் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலை பருப்பு புடலங்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 1/2 கப்
* புடலங்காய் - 1 (தோலுரித்து, நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - 1/4 கப் (துருவியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு
நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் நறுக்கிய வெங்காயம்,
தக்காளி, குழம்பு மிளகாய் தூள், புடலங்காய், சிறிது உப்பு சேர்த்து,
மீண்டும் குக்கரை அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் குக்கரில் உள்ள கலவையை அப்படியே சேர்த்து, நீர் அதிகமாக
இருந்தால், நீரை வற்ற வைக்க வேண்டும்.
* நீர் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான கடலைப் பருப்பு புடலங்காய் கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications











