Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
வீட்டுல முந்திரி பருப்பு நிறையா இருக்கா? அப்ப ஒருவாட்டி இந்த மசாலாவை ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
Kaju Pepper Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சற்று ஸ்பெஷலாக சமைத்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் சப்பாத்தி செய்து, அதற்கு காஜூ பெப்பர் மசாலாவை செய்து கொடுங்கள். இந்த காஜூ பெப்பர் மசாலா செய்வதற்கு முந்திரி அதிகமாக தேவைப்படும். ஏனெனில் இது தான் இந்த ரெசிபியின் ஹீரோ.
இந்த பெப்பர் மசாலா வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு சைடு டிஷ். இது க்ரீமியாக, ரிச்சாக இருக்கும். வீட்டில் ஏதேனும் விஷேசம் என்றால், இந்த பெப்பர் மசாலாவை செய்தால் நல்ல பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு காஜூ பெப்பர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஜூ பெப்பர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உடைத்த முந்திரி - 1/4 கிலோ (நீரில் ஊற வைத்தது)
* கசகசா - 50 கிராம் (நீரில் ஊற வைத்தது)
* வெங்காயம் - 1 கிலோ (அரைத்தது)
* தக்காளி - 1/2 கிலோ
* பச்சை மிளகாய் - 50 கிராம்
* பூண்டு - 50 கிராம்
* இஞ்சி பேஸ்ட் - 10 கிராம்
* ஏலக்காய் - 3 கிராம்
* கிராம்பு - 5 கிராம்
* பட்டை - 2 கிராம்
* பிரியாணி இலை - 1
* சீரகம் - 5 கிராம்
* சோம்பு - 3 கிராம்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரக தூள் - 1/4 டீஸ்பூன்
* வெள்ளை மிளகுத் தூள்- 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தல்லி - 1/2 கைப்பிடி
* வெண்ணெய் - 100 கி
* நெய் - 100 மிலி
* எண்ணெய் - 250 மிலி
செய்முறை:
* முதலில் உடைத்த முந்திரி மற்றும் கசகசாவை நீரில் 1 மணிநேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது பாலை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு பற்களை அரைத்து பேஸ்ட்
செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய், எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம்,
சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் பூண்டு விழுதை
சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, நீர் வற்றும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத்
தூள், வெள்ளை மிளகுத் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி,
சிறிது நீரை ஊற்றி வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த முந்திரி கசகசா பேஸ்ட்டை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் கிளறி விட்டு
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் முழு முந்திரி பருப்பை 1/4 கிலோ சேர்த்து கிளறி, 2
நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி, நெய் ஊற்றி கிளறி
இறக்கினால், சுவையான காஜூ பெப்பர் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications











