Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
பட்டாணி வெச்சு இந்த ஸ்டைலில் ஒருடைம் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பே தோத்துப் போயிடும்..
Pattani Kuzhambu Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் பலரது வீடுகளில் அசைவ உணவுகளுக்கு ஒரு மாதம் மட்டும் லீவு விட்டு, சைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் வழக்கம் இருக்கும். இப்படி அசைவ பிரியர்கள் ஒரு மாதம் வெறும் சைவத்தை மட்டும் சாப்பிடும் போது, அசைவ உணவின் சுவைக்கு இணையான சுவையைத் தரும் பல சைவ உணவுகளை தேடி சமைத்து சாப்பிடுவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சைவ குழம்பு தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் இது பட்டாணியும், உருளைக்கிழங்கும் வைத்து செய்வதால், சுவை இன்னும் அருமையாக இருக்கும். முக்கியமாக இப்படி குழம்பு செய்யும் போது, அது பூரி, சப்பாத்தி, சாதம் என அனைத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு பட்டாணி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* முந்திரி - 5
* தேங்காய் - 1/4 கப் (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை பட்டாணி - 300 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய 2 வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
முந்திரியையும் சேர்த்து, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்கி,
அடுப்பை அணைத்து பொருட்களை குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் நறுக்கிய 1/4 கப் தேங்காயுடன், இஞ்சி பூண்டு
பேஸ்ட்டையும் சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் வதக்கிய பொருட்களையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா
சேர்த்து ஒருமுறை கிளறி, துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, அதையும் நன்கு கிளறி, அரைத்து
வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி
கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால், சுவையான பட்டாணி
குழம்பு தயார்.
குறிப்பு: ஒருவேளை உங்களிடம் பச்சை பட்டாணி இல்லாவிட்டால், காய்ந்த பட்டாணியை வாங்கி அதை குறைந்தது 5-6 நிமிடம் நீரில் ஊற வைத்து, பின் அதை குக்கரில் போட்டு 4-5 விசில் விட்டு இறக்கி, பின் பயன்படுத்துங்கள்.
Image Courtesy: Gomathi food channel



Click it and Unblock the Notifications











