Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
1 கப் பச்சை பட்டாணியுடன், 4 முட்டை சேர்த்து இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா அள்ளும்...
Green Peas Egg Gravy Recipe In Tamil: இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஸ்பெஷலான, அதே சமயம் சிம்பிளான ஒரு கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பச்சை பட்டாணியுடன் முட்டை சேர்த்து கிரேவி செய்யுங்கள்.
இந்த கிரேவி செம டேஸ்ட்டாக இருக்கும். மேலும் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கிரேவியை செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு பச்சை பட்டாணி முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பட்டாணி முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 4
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (அரைத்தது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை பட்டாணி - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
முட்டை வேக வைப்பதற்கு...
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன்
உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சோம்பு,
சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அத்துடன் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு
பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள்
தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி
கிளறி, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதற்குள் மற்றொரு
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, நீரை ஊற்றி சூடேற்ற
வேண்டும்.
* பின் இட்லி பாத்திரத்தினுள் வைக்கும் அளவிலான ஒரு கிண்ணத்தை
எடுத்து, அதில் 'முட்டையை வேக வைப்பதற்கு' கொடுத்துள்ள மிளகாய் தூள்,
மிளகுத் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிரஷ் கொண்டு கிண்ணத்தில் தடவி, பின்
அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, இட்லி பாத்திரத்தினுள்
வைத்து, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* பின் வேக வைத்த முட்டைகளை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பட்டாணி வெந்ததும், இந்த முட்டைத் துண்டுகளை பட்டாணியுடன் சேர்த்து
கிளறி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான பட்டாணி முட்டை கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications











