இந்த பூண்டு கார சட்னியை செய்யுங்க.. 2 நாளைக்கு சட்னி பிரச்சனையே இருக்காது... இட்லி தோசைக்கு செமயா இருக்கும்..

Posted By:

Garlic Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் பூண்டும், சின்ன வெங்காயமும் இருக்கா? அப்படியானால் அந்த இரண்டு பொருட்கள் இருந்தால், அட்டகாசமான சுவையில் ஒரு சட்னியை செய்யலாம். அது தான் பூண்டு கார சட்னி.

இந்த சட்னி இட்லி, தோசைக்கு அற்புதமாக இருக்கும். மேலும் இதில் நல்லெண்ணெய் சேர்ப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Garlic Kara Chutney How To Prepare a Poondu Kara Chutney For Idli Dosa

உங்களுக்கு பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8-10 (காரத்திற்கு ஏற்ப)
* காஷ்மீரி மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* பூண்டு - 150 கிராம்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு நிறம் மாறி வரும் வரை மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளியை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மிளகாயை அரைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நீர் சேர்க்காமல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி, 2 நிமிடம் கிளறி விட்டு வேக வைத்து இறக்கினால், சுவையான பூண்டு கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, December 6, 2024, 7:18 [IST]
Desktop Bottom Promotion